ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் குழு கூட்டங்களுக்கு தாமதமாக வருவதாகவும், இதனால் கட்சியின் பல உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் 3 மணிக்கு இடம்பெறவிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகியே சஜித் பிரேமதாச வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவின் வழக்கமான தாமதத்தில் கட்சி நாடாளுமனற உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், எனினும் அதனை யாரும் சஜித்திடம் நேரடியாக வெளிப்படுத்தவில்லை என அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
சஜித் பிரேமதாசவின் தாமதத்தால் ஏமாற்றமடைந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் உற்சாகமின்றி கலந்துகொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
மறைந்த ஜனாதிபதியான சஜித் பிரேமதாசவின் தந்தை, ரணசிங்க பிரேமதாச சரியான நேரத்தில் பணியாற்றிய ஒரு தலைவராக நன்கு அறியப்பட்டவர்.
இன்று சஜித் பிரேமதாசவுடன் இருக்கும் ரணசிங்க பிரேமதாசவுடன் பணிபுரிந்த ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்தவர்கள், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் பணியாற்றிய இந்த தரத்தை இன்னும் மதிக்கிறார்கள்.” என அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.