‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் தனது 61-வது படத்தில் அட்லியுடன் மீண்டும் இணையப்போவதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வந்தது.
அட்லி படத்திற்கு பின்னர், விஜய் தனது 62-வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. முருகதாஸ் – விஜய் கூட்டணி துப்பாக்கி, `கத்தி’ உள்ளிட்ட இரு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தனுசும் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தனுசின் ஒன்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது. முன்னதாக விஜயின் `கத்தி’ படத்தை தனுஷ் தயாரிக்க இருந்தார். பல்வேறு காரணங்களால் அது தடைபட்ட நிலையில், தற்போது, விஜயின் 62-வது படத்தை தனுஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள `பைரவா’ படம் பொங்கல் விருந்தாக வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.