தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்றைய தினத்தில் எந்தவித பெரிய பாதிப்பும் இல்லாமல் நடந்து முடிந்தது.
அனைத்து, அரசியல் கட்சியினர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வத்துடன் வாக்குகளை அளித்தனர்.
மேலும், தமிழகத்தில் மட்டும் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கியது முதல் கட்சியின் சின்னம் பொருத்தப்பட்ட வெள்ளை சட்டையுடன் தான் வலம் வந்தார்.
அதன் பின் சின்னம் பொருத்தப்பட்ட சட்டையுடன் திமுக வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்து வந்தார்.
இதையடுத்து, திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மெரினா சென்று அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, தேனாம்பேட்டை எஸ் ஐ இ டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குகளை செலுத்தினர்.
அப்போது, திமுக வேட்பாளராக போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு சென்றது போலவே கட்சியின் சின்னம் பொறித்த சட்டையுடன் வாக்களிக்கச் என்றார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்பதால் அதிமுகவின் பாபு முருகவேல் என்பவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
மேலும், இப்புகாரை பெற்றுக் கொண்ட தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அறிக்கை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனால் உதயநிதி ஸ்டாலின் இரண்டு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.