யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு தனது காணி, வீட்டை பெண்மணியொருவர் அன்பளிப்பு செய்துள்ளார்.
கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு கிழக்கு புறமாக உள்ள காணியும், வீட்டையுமே அன்பளிப்பு செய்துள்ளார். அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிகமானதாகும்.
தேசராசா இந்திராணி என்ற பெண்மணியே தனது சொத்தை அன்பளிப்பு செய்துள்ளார்.
அவரை பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்து, கௌரவித்துள்ளது.
இப்படியாக புலம்பெயர் நாடுகளில் உள்ள பலர் நாட்டை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளனர், வெளியேறிய பலரின் காணிகள் இன்று தரிசு நிலங்களாக உள்ளன. அவற்றினால் தான் தற்போது ஆபத்துக்கள் அதிகம் காரணம் பராமரிப்பார் இல்லாத காணிகளை அரசு சுவிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முழுமையாக குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் முதலில் இல்லாதவர்களிற்கு கொடுக்கலாம் அல்லது பொது விடயங்களிற்கு மேல் உள்ள தேசராசா இந்திராணி போன்ற மூதாட்டி போன்று கொடுத்து உதவலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றார்கள்.
