Loading...
யாழ்.மாநகரில் 75 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் இன்று திறக்கப்பட்டு நகரம் வழமைக்கு திரும்பியுள்ளது.
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர் அல்லது பணியாளர் உள்ள சுமார் 75 வர்த்தக நிலையங்களுக்கு தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி மீளத் திறக்கஅனுமதிக்கப்பட்டுள்ளது.
Loading...
அத்துடன் யாழ்.மாநகர மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், தனியார் சேவை வழமையான தரிப்பிடங்களில் இருந்தும் பேருந்து சேவைகளை நடந்துவருகின்றனர்.
இதேவேளை பேருந்து சேவைகளில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்றும் மீறினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...