இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விற்பனை விலை மீண்டும் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
நேற்றைய தினம் இலங்கை ரூபாயின் விற்பனை விலை 202.88 ரூபாயாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அத்துடன் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 198.56 ரூபாயாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.70 ரூபாயாக பதிவாகிய நிலையில் கொள்வனவு விலை 198 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 203.49 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.