கண்டங்கத்திரியின் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரிக்கு உண்டு. கண்டங்கத்திரிக்கு காசம், சுவாசம், ஷயம், அக்கினி மந்தம், சன்னி, வாதம், தோஷ நோய்கள், தீச்சுரம், வாதநோய், ரத்தசுத்தி போன்றவற்றைத் தடுக்கும் குணமுண்டு.
தலையில் நீர் கோர்த்தல், சூலை நீர் எனப்படும் கப நீர், பித்த நீர் இவற்றை சீராக்கி செயல்படுத்தி மாற்றவும், தொண்டையில் நீர்க்கட்டு, தொண்டை அடைப்புகள்,
மூக்கில் நீர் வடிதல், சளி உண்டாதல் போன்றவற்றிற்கும், மூச்சுத் திணறல், இருமல், ஈழை, இழுப்பு இவற்றிற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி.
பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் குணமுள்ளவை. கண்டங்கத்திரி காது, மூக்கு, தொண்டை,
வயிற்றுப்பகுதி மூதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப் போக்குகிறது..
கண்டங்கத்திரிக்கு ரத்தத்தில் சளியையும், ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு. அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.
கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி, சரும
பாதிப்பு இவைகளுக்கு மேல்பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.