சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்யமுயன்ற குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார் பொலிஸ் மேலதிகாரி ஒருவர்.
தனது துறையிலுள்ளவர் தவறு செய்தால் அந்த தவறை பொதுமக்கள் அறிந்துகொள்ளாமல் எப்படியாது மறைத்து குற்றவாளிகளை காப்பாற்றுவதில் சிலர் குறியாக இருக்கும் நிலையில் குறித்த அதிகாரியின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.
குற்றவாளிகளுக்கு துணைபோகாமல் தனது ஆளுமையின் கீழ் இருந்த குறித்த உத்தியோகத்தர்கள் மீது அவர் எடுத்த நடவடிக்கை பலருக்கும் முன்னுதாரணமாகியுள்ளது.
போஹோரன்வேவாவில் வீதி வழியாக தினம் பிரத்தியோக வகுப்புக்கு சென்று வந்த 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரை பாதுகாத்த மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தம்புள்ளை பொலிஸ் குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி (OIC) மற்றைய இன்ஸ்பெக்டர் வன்னிநாயகே மற்றும் 60533 பொலிஸ் சார்ஜென்ட் ராஜபக்ஷ கான்ஸ்டபிள் அதிகாரி 77199 டி.எம்.எஸ் சதுரங்கா ஆகியோரை நேற்று தம்புள்ளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் 60533 இலக்கமுடைய போலீஸ் சார்ஜென்ட் , இந்த கொடூர செயலுக்கு குற்றவாளிக்கு முச்சக்கர வண்டியை கூட வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் வேலியே பயிரை மேய்ந்தது போன்று பாதுகாப்பு தர வேண்டியவரே குற்றவாளியை காப்பாற்றினால் யார் பொறுப்பு எனும் மனநிலையிலிருந்த மக்களுக்கு குறித்த அதிகாரி தனது கடமை செவ்வனே செய்து பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.