Loading...
தற்போதைய காலத்தில், சொந்தத்திலேயே திருமணம் செய்துக் கொள்ளும் பழக்கம் அதிகமாக நடைபெற்று வருகின்றது.
இதனால் ரத்த உறவுகள் மட்டும் நீடிக்குமே தவிர, நம்முடைய மற்றும் நமது சந்ததிகளின் உடல் ஆரோக்கியம் நீடிப்பதில்லை.
Loading...
ஏனெனில் நமது ரத்தசொந்த உறவில் திருமணம் செய்துக் கொள்வதால், பரம்பரையாக இருக்கும் நோய்கள் தாக்குவதோடு, அது தங்களின் சந்ததிகளுக்கு பரவி புதிய வகை நோய்களையும் ஏற்படுத்துகிறது.
ரத்த சொந்த உறவுமுறையால் ஏற்படும் நோய்கள்
- வெண்குஷ்டம் என்ற நோயானது, பொதுவாக 20,000 நபர்களில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. மேலும் ரத்த சொந்த சந்ததியினருக்கு இந்த நோய்களின் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
- ஃபினைல்கீடோன்யூரியா (Phenylketonuria) என்ற சிறுநீரகக் குறைபாடுகள் சாதாரணமாக 25,000 நபர்களில் ஒருவருக்கு மட்டுமே தாக்கக் கூடியது. ஆனால் சொந்த உறவுத் திருமண சந்ததியினைரப் பொறுத்தவரை 25,000 நபர்களில் 13 நபர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படுகிறது.
- சொந்த உறவுகளின் திருமணத்தினால், நமது சந்ததிகளை பாதிக்கக் கூடிய நோய்களில் ஒன்று தான் ரத்த அழிவுச் சோகை. இதனால் இறப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த நோயை தலசீமியா என்று கூறுவார்கள்.
- நோய்களின் தாக்கத்திற்கு, காரணமான மரபணுக்கள் தாய் அல்லது தந்தை இடமிருந்தும் பிறந்த குழந்தைக்கு பரவும் போது, அது அந்தக் குழந்தைக்கு, வயிறு உப்பியிறுத்தல்,, கல்லீரலும் எலும்பு மஜ்ஜையும் வீங்குவது, தலை வீங்குவது, இதயம், சிறுநீரகத்தின் செயல் குறைவது, களைப்பு ஏற்படுவது இது போன்ற பலவித அறிகுறிகள் இருக்கும்.
- உறவு முறையில் திருமணம் செய்துக் கொள்வதால், குழந்தைகளின் வளர்ச்சிதைக் குறைபாடுகள் ஏற்பட்டு, அந்தக் குழந்தை ஊனமாகக் கூட அதிக வாய்ப்புகள் உள்ளது.
Loading...