பிரேசில் நாட்டில் நாளுக்கு 4,000 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறக்கும் நிலையில், பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.34 கோடியைக் கடந்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு, சமீப நாட்களாக தொடர்ந்து உச்சம் கண்டு வருகிறது.
இந்த ஒரு வாரத்தில் மட்டும் நாளுக்கு 4,000 பேர்கள் பலியாகும் மிக மோசமான சூழலில் சிக்கியுள்ளது பிரேசில் நாடு.
இருப்பினும் மெத்தனப் போக்கையே பின்பற்றி வருகிறார் அங்குள்ள ஜனாதிபதி Jair Bolsonaro. வெறும் காய்ச்சல், பொதுமக்கள் பீதியடையத் தேவை இல்லை என கூறி வந்துள்ள Jair Bolsonaro,
கொரோனா பரவலை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க தவறி வருகிறார்.
உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் தொடங்கி, உச்ச நீதிமன்ற நீதிபதி வரை கடும் விமர்சனங்களை முன்வைத்தும், ஜனாதிபதி Jair Bolsonaro மக்கள் குறித்து கவலை கொண்டதாக தெரியவில்லை என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, கொரோனா காலகட்டத்தில் அவரது செயற்பாடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதை மிக மோசமாக அவர் விமர்சித்துள்ளார்.
பொது ஊரடங்கு, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்டவைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜனாதிபதி Jair Bolsonaro,
நிபுணர்களின் ஆலோசனைகளை புறந்தள்ளியதாலையே, நாடு முழுவதும் இறப்பு எண்ணிக்கை உச்சம் தொடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
பல மாகாணங்களில் சுகாதார அமைப்பு ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போதிய மருத்துவ வசதிகள் இன்மை காரணமாக பலர் சிகிச்சை இன்றி இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.