சுவிஸில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்களை கலைக்க பொலிசார் pepper spray மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் யூரி மண்டலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,
சனிக்கிழமை Altdorf பகுதியில் சுமார் 500 பேர்கள் திரண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை என்பது மட்டுமின்றி, சமூக இடைவெளியும் கடைபிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
பொதுவாக கொரோனா அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில், அதிக கூட்டம் திரள வாய்ப்பில்லை என்றே பொலிசார் கருதியுள்ளனர்.
ஆனால், சுமார் 500 பேர்கள் திரண்டுள்ளது தங்களுக்கு வியப்பாக இருந்தது என பொலிஸ் தரப்பே தெரிவித்துள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைதியான முறையில் கலைந்து செல்ல யூரி மண்டல பொலிசார் கோரியுள்ளனர்.
ஆனால், பெரும்பாலானோர் கண்டுகொள்ளாத நிலையில், pepper spray மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, நகரத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு வெளியேறும் உத்தரவையும் 180 பேர்களுக்கு நகர நிர்வாகத்தால் அளிக்கப்பட்டுள்ளது.
நகரின் பல பகுதிகளில் இருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.