ரம்யா நம்பீசன் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, சிபிராஜுடன் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அவ்வப்போது பின்னணி பாடல்களையும் பாடி வருகிறார்.
மலையாளத்தில் பல பாடல்கள் பாடியிருக்கும் ரம்யாநம்பீசன், தமிழில் ‘பாண்டியநாடு’ படத்தில் லட்சுமிமேனனுக்காக டி.இமான் இசையில் பாடிய ‘பை… பை… பை… கலாசி பை…’ பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
பின்னர் ‘டமால் டுமீல்’, ‘சகாப்தம்’, ‘சகலகலாவல்லவன்’ படங்களிலும் பாடினார். தற்போது ‘சதுரங்க வேட்டை-2’ படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் திரிஷாவுக்காக ஒரு பாடலை ரம்யா நம்பீசன் பாடி இருக்கிறார்.
அஸ்வமித்ராவின் இசையில் அவர் இந்த பாடலை பாடி இருக்கிறார். இந்த தகவலை இதன் தயாரிப்பாளர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.