பிரித்தானியாவை சேர்ந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்த இந்திய இளைஞர் இரண்டாவது முறையாக சிறையில் இருந்து தப்பிய நிலையில் பொலிசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கோவாவுக்கு வந்த பிரித்தானிய பெண்ணை கடந்த 2018ல் சீரழித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ராமச்சந்திரன் எல்லாப்பா (32) என்ற நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஜூன் மாதம் சிறையில் இருந்து தப்பிய ராமச்சந்திரன் பொலிசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதன் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது முறையாக சிறையில் இருந்து ராமச்சந்திரன் தப்பித்து ஓடி பொலிசுக்கு தண்ணி காட்டியுள்ளான்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் கர்நாடக மாநிலத்தின் ஹொஸ்கோட்டில் மறைந்திருந்த ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.