லண்டனில் வயதான பெண்ணொருவர் வீட்டு குளியல் தொட்டியில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
லண்டனின் இல்போர்டில் தான் இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்துள்ளது.
அங்குள்ள ஒரு வீட்டிற்கு பொலிசார் அன்றைய தினம் காலையில் 10.51க்கு சென்றனர்.
அப்போது குளியல் தொட்டியில் 80 வயதான பெண் சுயநினைவின்றி கிடந்தார். அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இந்த நிலையில் அவரை கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 54 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் அதே இடத்தில் நின்றிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணும், கைது செய்யப்பட்ட நபரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என தெரியவந்துள்ளது.
இது குறித்து அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண் ஒருவர் கூறுகையில், உயிரிழந்த மூதாட்டி அந்த வீட்டில் 35 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
அவர் இறந்தது வருத்தமான செய்தியாகும். இது ஒரு பயங்கரமான மரணமாகும்.
அதுவும் சொந்த வீட்டிலேயே இப்படி இறந்திருப்பது வேதனை தருகிறது என கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலதிக தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.