மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசர் பிலிப், தனது மகனிடம் கடைசியாக பேசியது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இளவரசர் பிலிப், கடந்த வெள்ளிக் கிழமை தன்னுடைய 99 வயதில் உயிரிழந்தார். இந்நிலையில், பிலிப் லண்டன் மருத்துவமனையில் இருந்த போது, தன்னுடைய மகனும், இளவரசருமான சார்லஸிற்கு(Prince of Wales) சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து Royal commentator ராபர்ட் ஜாப்சன், அது ஒரு உணர்ச்சிபூர்வமான உரையாடல். இளவரசர் பிலிப் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைய வாய்ப்பில்லை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.
அவர் இதய அறுவை சிகிச்சை மற்றும் நோய்தொற்றுக்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார். இது போன்ற நிலையில், தான் கடந்த பிப்ரவரி மாதம் சார்லஸ் தந்தை பிலிப்பை மருத்துவமனையில் சந்தித்ததாக கூறினார்.
மேலும், அரச வட்டாரங்கள் இது குறித்து கூறுகையில், இளவரசர் பிலிப் மருத்துவமனையில் இருந்து வெளியேற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருந்தார்.
அப்போது தான் தனது மகனை சந்தித்து பேச வேண்டும் என்று அழைத்தார். அது ஒரு இதயப்பூர்வமான சந்திப்பாக இருந்தது.
ஏனெனில் அது எப்போதும் போன்ற சந்திப்பாக இல்லை என்று கூறுகின்றன. அதே சமயம் தன்னுடைய மருத்துவ படுக்கையில், பிலிப், சார்லஸிடம், மகாராண் இரண்டாம் எலிசபத்தை எவ்வாறு கவனிப்பது? ராயல் குடும்பத்தை எவ்வாறு வழிநடத்துவது போன்ற ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.