பிரித்தானியா மக்கள் தற்போது கோடை கால விடுறையை வெளிநாடுகளில் செலவிடுவதை சிந்திக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானியாவில் தடுப்பூசி நடவடிக்கை அவசரகால நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிரித்தானியாவில் 60 சதவீத கொரோனா தொற்று குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இதன காரணமாக நாளை முதல் பிரித்தானியாவில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா குறைந்து வரும் நிலையில், பிரித்தானியா மக்கள் தற்போது கோடை கால விடுறையை வெளிநாடுகளில் செலவிடுவதை சிந்திக்க வேண்டும் என்றுபோக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார்.
அவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நீங்கள் உங்கள் கோடை விடுமுறையை வெளிநாடுகளில் செலவழிக்க டிக்கெட்டுகளை ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று கூறமாட்டேன்.
நீங்கள் உங்கள் விடுமுறையை வெளிநாடுகளில் செலவழிப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். எனினும் மக்களுக்கு கொரோனாவின் ஆபத்து குறித்து தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால், நாங்கள் இதில் எச்சரிக்கையாக இருப்போம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா பரவுவதை நாங்கள் விரும்பவில்லை என்று எச்சரித்துள்ளார்.