ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையத்தை நாசப்படுத்தும் வேலை முன்னெடுக்கப்பட்டதாக நாட்டின் முக்கிய அணுசக்தி அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி அமைப்பின் (AEOI) செய்தித் தொடர்பாளர் Behrouz Kamalvandi, ஞாயிற்றுக்கிழமை காலையில் அணுசக்தி நிலையத்தின் மின் வலையமைப்பை உள்ளடக்கிய செயல்திறன்களை நாசப்படுத்தும் வேலைகள் நிகழ்ந்ததாகக் கூறினார்.
எனினும், இதுகுறித்து மேலதிக தகவல்கள் ஏதும் வழங்காத Behrouz Kamalvandi, எந்த வித பாதிப்பும், கசிவுகளும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தினார்.
பின்னர், AEOI தலைவர் Ali Akbar Salehi வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவத்தை நாசவேலை மற்றும் அணு பயங்கரவாதம் என்று விவரித்தார்.
“இந்த இழிவான நடவடிக்கையை ஈரான் கண்டிப்பதாக கூறிய Ali Akbar Salehi, இந்த அணு பயங்கரவாதத்தை சமாளிக்க சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் [IAEA] ஆகியவற்றின் அவசியத்தை ஈரான் வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையை ஈரானுக்கு உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், இஸ்ரேலிய பொது ஊடகங்கள் உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இது இஸ்ரேலிய இணைய தாக்குதலின் விளைவு என்று கூறியது.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.