மறைந்த பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் நிகர சொத்து மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் 99 வயதில் கடந்த 9ஆம் திகதி காலமானார்.
காலை வேளையில் வின்ட்சர் கோட்டையில் இளவசர் பிலிப் உயிர் பிரிந்தது. உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இணைந்து அரச குடும்பமும் அவரது இழப்புக்கு இரங்கல் தெரிவித்தது.
எதிர்வரும் 17ம் திகதி இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் பிலிப்பின் சொத்து மதிப்பு குறித்த தகவலை செலிபிரிட்டி நெட் வொர்த் இணையதளம் வெளியிட்டுள்ளது.
பிலிப் உலகின் பணக்காரப் பெண்ணை மணந்து, மிக உயர்ந்த அரச சேவையுடன் பழகியிருந்தாலும், அவர் ஆடம்பரமாக வாழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிசபெத்தின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட $28 பில்லியன் ஆகும்.
அவருடையதை சேர்க்காமல் இளவரசர் பிலிப்பின் சொத்து மதிப்பு மட்டும் அவர் இறக்கும் போது $30 மில்லியன் என செலிபிரிட்டி நெட் வொர்த் தெரிவித்துள்ளது.