பிரித்தானியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தலின் அடுத்த கட்டமாக இன்று(ஏப்ரல் 12) முதல் மக்கள் அத்தியாவசியமற்ற கடைகளுக்கு செல்லலாம்.
பிரித்தானியாவில் இன்று முதல் அத்தியாவசியமற்ற கடைகள், சிகையலங்கார கடைகள், ஜிம்கள் மற்றும் பப்கள் மீண்டும் திறக்கப்படும்.
ஆனால் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வைரஸை அடக்குவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தலின் அடுத்த கட்டமாக இன்று(ஏப்ரல் 12) முதல் பிரித்தானியாவில் அனைத்து கடைகளும் மீண்டும் திறக்கலாம், சிகையலங்கார கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் பிற நெருங்கிய தொடர்பு சேவைகள் திறக்கலாம்.வெளியில் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவு மற்றும் மதுபானங்களை வழங்க உணவகங்கள் மற்றும் பப்களுக்கு அனுமதி.ஜிம்கள், ஸ்பாக்கள், உயிரியல் பூங்காக்கள், தீம் பூங்காக்கள், நூலகங்கள் மற்றும் சமூக மையங்கள் அனைத்தும் திறக்கலாம்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் தன்னிறைவான விடுதிகளில் விடுமுறைக்கு செல்லலாம்.
15 பேர் வரை திருமணங்களில் கலந்து கொள்ளலாம், 30 பேர் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளலாம்.குழந்தைகள் எந்த உட்புற குழந்தைகளின் செயல்பாட்டிலும் கலந்து கொள்ளலாம்.
பராமரிப்பு இல்லங்களில் ஒரு குடியிருப்பாளரை இரண்டு பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி.
ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் தேர்வுகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளதால், ஓட்டுநர் வகுப்புகள் மீண்டும் தொடங்கலாம்.