Loading...
பொதுவாக வயதுக்கு வந்த பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் 28-35 நாட்களுக்குள் மாதந்தோறும் மாதவிடாய் வருகிறது என்றால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.
அதுவும் 40 நாட்களுக்கு மேல் அல்லது வராமல் நின்று விடுகிறது என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
அதுமட்டுமின்றி ஏன் மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போகின்றது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்திருப்பது அவசியமானது ஆகும்.
Loading...
அந்தவகையில் மாதவிடாய் தள்ளிப்போக காரணம் என்ன? அவற்றை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி தற்போது பார்ப்போம்.
தள்ளி போக காரணம் என்ன?
- அதிக மன அழுத்தம் காரணமாக ஹார்மோனில் சுரப்பு குறைகிறது, இதனால் கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது தாமதம் ஆவதால் மாதவிடாய் தடைபடுகிறது.
- திடீரென உடல்நிலை சரியில்லாமல் போதல் அல்லது ஏதேனும் நோயின் வெளிப்பாடாக கூட மாதவிடாய் தள்ளி போகலாம்.
- பகல் ஷிப்ட், இரவு ஷிப்ட் என்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும்.
- நீங்கள் மருந்து ஏதேனும் உட்கொண்டு வந்தால், அதன் பக்கவிளைவாக கூடவும் மாதவிடாய் தள்ளி போகலாம். அளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும்.
இவற்றை தடுக்க என்ன செய்யலாம்?
- அன்னாசி உடலின் வெப்பத்தை தூண்டக்கூடிய பழம் என்பதால் மாதவிடாய் தாமத சிக்கல்களை தவிர்க்க உதவுகிறது.
- பப்பாளி உடல் வெப்பதை தூண்டக்கூடிய பழ வகையாகும். இதிலுள்ள கரோட்டீன், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டக்கூடியது. அதனால் மாதவிடாய் குறைபாடுகள் அகலும்.
- மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் தண்ணீரில் ஓம விதைகளை ஊறவைத்து குடிப்பதும் மாதவிடாய் தாமத பிரச்சனைகள் தீர வழிவகுக்கும்.
- இஞ்சி, தேநீர், இஞ்சிச்சாற்றை தேன் கலந்து பருகுவது போன்றவை சீக்கிரமே மாதவிடாய் வெளிப்பட உதவும். வெல்லத்துடன் எள் விதை சேர்த்து இடித்து உருண்டை பிடித்து சாப்பிட்டு வந்தாலும் மாதவிடாய் தாமதங்கள் தவிர்க்கப்படும்.
Loading...