பிரபல நடிகர் சதீஷ் கவுல் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
பஞ்சாபி நடிகரான சதீஷ் கவுல் (76) 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
கடந்த 1970களில் திரையுலகில் அடியெடுத்து வந்த அவர் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சதீஷ் நடிப்பு பள்ளி ஒன்றை பெரும் செலவில் தொடங்கினார். ஆனால் அந்த தொழில் பலத்த நஷ்டம் அடைந்து அனைத்து பணத்தையும் சதீஷ் இழந்தார்.
இதன் பின்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சதீஷ் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
சதீஷ் மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.