கனடாவில் நதியோரமாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்டிருந்த தம்பதியர் திடீரென சிறுவன் ஒருவன் உதவி கோரி கூக்குரலிடுவதைக் கேட்டு அங்கு ஓடிச்சென்றுள்ளார்கள். தென் சாஸ்கச்சேவான் நதிக்கரையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Brad Pilonம் அவரது மனைவியான Ashley Pilonம் அங்கு சென்று பார்க்கும்போது, எட்டு வயது சிறுவன் ஒருவன் நதி வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருப்பதையும், அவனது உறவினரான சிறுவன் ஒருவன் கூக்குரலிட்டுக்கொண்டிருப்பதையும் கண்டுள்ளனர்.
அந்த சிறுவனிடம், தன் கை கால்களை அடித்து நீந்த முயலுமாறு Brad கூற, அவனோ தண்ணீர் தன்னை இழுப்பதாகவும், தன்னால் இயலவில்லை என்றும் கூறியுள்ளான். உடனே, முன்பின் யோசிக்காமல் தண்ணீரில் குதித்துள்ளார் Brad.
அந்த சிறுவனை அவர் கரைக்கு இழுத்துவர, அவரது மனைவியும் சில நண்பர்களுமாக அவனுக்கு உலர்ந்த உடைகளை அணிவித்துவிட்டு அவசர உதவிக்காக காத்திருந்திருக்கிறார்கள்.
அவசர உதவிக்குழுவினர் வந்து அந்த சிறுவன் ஹைப்போதெர்மியா பிரச்சினைக்குட்பட்டிருப்பதைக் கண்டு அவனுக்கு சிகிச்சையளித்துள்ளார்கள், தற்போது அவன் குணமடைந்துவிட்டான்.
Brad சரியான நேரத்துக்கு அந்த சிறுவனைக் காப்பாற்றியிருக்காவிட்டால், அங்கு ஒரு துயர சம்பவம் நடந்திருக்கும் என்று கூறியுள்ள மருத்துவ உதவிக்குழுவினர், Bradக்கு வீரப்பதக்கம் ஒன்றையும் விருது ஒன்றையும் வழங்க முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மக்கள் Brad ஒரு ஹீரோ என்று கூறி, அவருக்கு புகழாரம் சூட்டி வருகிறார்கள்.