Loading...
கனடாவில் மூன்று கார்கள் மோதி கொண்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
நியூ ப்ருன்ஸ்விக்கில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சாலையில் மூன்று கார்கள் மோதி கொண்டது.
Loading...
இதில் முதல் காரில் இருந்த 31 வயதான இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டாவது காரில் இருந்த 34 வயது பெண் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மூன்றாவது காரில் இருந்த பெண் மற்றும் சிறுவனுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில் அங்கேயே சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading...