இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆட்டோவில் சிகிச்சை அளிக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் மாநிலங்களில் மகாராஷ்டிராவுன் ஒன்று.
மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் புதிதாக 51,751 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளனர், 258 பேர் உயரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதால் படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சடாரா மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆட்டோவில் வைத்து ஆக்ஸிஜன் உதவி வழங்கப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில், பெண் ஆட்டோவிற்குள் அமர்ந்திருக்க வெளியே உள்ள சிலிண்டரிலிருந்து அவருக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் உதவி அளிக்கப்படுகிறது.இந்த வீடியோவை கண்ட மக்கள் பலர் மாநிலத்தில் உள்ள மைதானங்களை மருத்துவ மையங்களாக மாற்ற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.