ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்து தீபக் ஹூடா அசத்தியுள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியின் ரன்குவிப்பிற்கு தீபக் ஹூடாவின் அதிரடியும் முக்கிய காரணம்.
அவர் 20 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் விளாசினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத வீரர் ஒருவர், 23 பந்திற்குள் இரண்டு முறை அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தொடர்ந்து விளையாடிய தீபக் ஹூடா 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.