இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு நிகழ்வில் மூத்த உறுப்பினர்கள் தங்களின் இராணுவ சீருடையில் கலந்து கொள்வதை ராணியார் தடை விதித்துள்ளார்.
காலமான இளவரசர் பிலிப்பின் இறுதி மரியாதையில் கலந்து கொள்ள நீண்ட ஓராண்டுக்கு பிறகு பிரித்தானியா திரும்பியுள்ளார் இளவரசர் ஹரி.
எதிர்வரும் சனிக்கிழமை இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகள் இராணுவ மரியாதையுடன் முன்னெடுக்கப்படுகிறது. இதில் பட்டத்து இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் உட்பட அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் அவர்களுக்கான இராணுவ சீருடையில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது வாடிக்கையான நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அரச குடும்பத்தை விட்டு வெளியேறியுள்ள ஹரியால் தமது இராணுவ சீரிடையை அணிய முடியாத சூழல்.
மாறாக அவரால் பதக்கங்களை மட்டுமே அணிந்து பங்கேற்க முடியும். இது இவ்வாறிருக்க, விசாரணை வட்டத்தில் இருக்கும் இளவரசர் ஆண்ட்ரூவும் இராணுவ சீருடை அணிவதில் மூத்த கடற்படை தளபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த சிக்கல்களில் இருந்து அரச குடும்பத்து உறுப்பினர்களை காப்பாற்றும் நோக்கில் ராணியார் இரண்டாம் எலிசபெத், மிகப் பொருத்தமாக முடிவை எடுத்துள்ளதாக பாராட்டப்படுகிறார்.
அதன்படி, இறுதிச்சடங்கில் பங்கேற்கும் மூத்த உறுப்பினர்கள் எவரும் இராணுவ சீருடையில் பங்கேற்க மாட்டார்கள். மாறாக, அவர்களுக்கான பதக்கங்களை மட்டுமே அணிந்து கொள்வார்கள் என ராணியார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.மூத்த உறுப்பினர்கள் அனைவரும் இராணுவ சீருடையில் இருக்க, இளவரசர் ஹரி மட்டும் சீருடை இன்றி தர்மசங்கடத்தில் இருக்க வேண்டாம் என ராணியார் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.