உடல் எடை குறைப்பில் தான் எத்தனை விதமான சிகிச்சைகள். விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு இருந்தாலும் இவை எல்லாமே உண்மையில் பலனளிக்கிறதா என்று கேட்டால் இவை பெரும்பாலும் பக்கவிளைவுகளை உண்டாக்குபவையே.
எல்லோரும் இயற்கையாகவே பல குறைபாடுகளை ஆரோக்கியம் என்று நினைத்துகொண்டிருக்கிறோம்.
அதில் ஒன்று கொழுகொழுவென்று இருப்பது ஆரோக்கியம் என்று. குழந்தை பிறக்கும் போது 4 கிலோ வுக்கு மேல் எடையில் கொழுகொழு வென்று இருந்தால் அது ஆரோக்கியம் என்று நினைத்துகொண்டிருக்கிறோம்.
உண்மையில் இது ஆரோக்கியம் அல்ல. இது ஒரு உடல் நலக்கோளாறு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு குழந்தை உடல் ஒல்லியாக இருந்தால் உடனே உறவினர்களும் நட்பு வட்டமும் குழந்தைக்கு பால் கொடு, நெய் அதிகமாக கொடு அப்போதுதான் உடல் பிடிக்கும் என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.
இங்கு தான் உடல் எடை அதிகரிக்க தொடங்குகிறது. உடல் பருமனுக்கு காரணங்கள் ஹார்மோன் ஊசி, மருந்துகள் என்பது வேறு. இதை தாண்டி மிக முக்கியமானது பசியில்லாமல் நேரத்துக்கு தவறாமல் சாப்பிடுவது.
உணவை மென்று விழுங்காமல் வேகமாக விழுங்குவது, சாப்பிட்ட உடன் பகல் தூக்கம் போடுவது இவை எல்லாமே உடல் பருமனை உண்டாக்குபவை.
இவையெல்லாம் தாண்டி உடலில் மலச்சிக்கல் பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் தான் உடல் பருமனை எதிர்கொள்கிறார்கள். உடல் எடையில் கை, கால்கள் பருமனாக இருப்பது சரி.
ஆனால் முதலில் வயிறு தான் பருத்து காணப்படுகிறது. பிறகு வயிறை சுற்றியுள்ள பகுதி பெரிதாகிறது. அதன் பிறகு தான் உடல் பருமனை சந்திக்கிறது.
உடல் பருமன் தொடங்குவதற்கு முதல் புள்ளியே மலச்சிக்கல் தான். இந்த பருமன் அடி வயிற்றில் இருந்து தான் தொடங்குகீறது. அதே நேரம் உடல் பருமனை கொண்டிருப்பவர்கள் யாராவது தட்டையான வயிற்றை கொண்டிருக்கிறார்களா? சரி உடல் பருமனை குறைக்க என்ன செய்கிறோம் இதை தான் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
முதலில் 10 நாளில் இத்தனை கிலோ குறைத்துவிடுகிறோம் என்பதில் தொடங்கியது. பிறகு இதை மட்டும் சாப்பிடுங்கள் உடலில் எடை அதிகரிக்காது என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு நவீனமாக எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். உடல் எடை குறைக்கிறோம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய் உங்களுக்கு பசிக்காமல் இருக்க நாங்கள் வழி சொல்கிறோம் என்கிறார்கள். இப்படி உடல் எடை குறைக்க சிகிச்சை என்னும் பெயரில் பலவிதமான டெக்னிக் சொல்லித்தரப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் நிரந்தரமானது அல்ல.
இது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததும் அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அதற்கு காரணம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
இப்போது பல்வேறு உடல் நல குறைப்பாட்டோடு வருபவர்களை நாங்கள் பார்க்கிறோம். அதில் உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் பின் விளைவாக பக்கவிளைவுகளை கொண்டு விடுகிறார்கள்.
இதனால் உடல் பருமனாகவே இருந்திருக்கலாம் என்னும் அளவுக்கு வந்துவிடுகிறார்கள். உடல் எடையை வேகமாக குறைக்க சிகிச்சை செய்கிறோம் என்று யாராவது சொன்னால் தயவு செய்து அதை ஃபாலோ செய்யாதீர்கள்.
அது இயற்கையானதாக இருந்தாலும் செயற்கையாக இருந்தாலும். ஏனெனில் இந்த முயற்சி ஆரோக்கியமானதல்ல. உடல் பருமன் என்பது உடனடியாக வரக்கூடியதல்ல. அது உடல் உள்ளுறுப்புகளில் தயாரான பிறகு தான் பருமன் உண்டாகிறது.
அதே போன்று உடல் பருமனை குறைக்கும் போதும் வேகமாக குறைக்க கூடாது. உடல் உள்ளுறுப்புகள் வீக்கத்தை குறைத்து அந்த இடத்தை சரி செய்த பிறகு தான் உடல் பருமன் குறைய வேண்டும்.
இல்லையெனில் தோல் சுருக்கம் உண்டாக கூடும். தோல் இளகி நெகிழும். இதயம் உடல் பருமனுக்கேற்றபடி துடிப்பை வெளிப்படுத்தும். சடாரென்று வேகமாக இதயத்துடிப்பை மாற்றிக்கொள்ள உடல் தயாராக இருக்காது. இதை போன்று பல சிக்கல்கள் உண்டாக கூடும்.
இது செயற்கையானது. ஆபத்தானதும் கூட. உடல் எடை குறைப்பு சீக்கிரமாக நிகழ மருந்துகள் , ஊசிகள், உடற்பயிற்சிகள் என எல்லாமே உடலுக்கு பாதுகாப்பானது கிடையாது.
சிலர் இறைச்சியை மட்டுமே எடுத்துகொள்வதன் மூலம் உடல் எடை குறைக்கலாம் என்கிறார்கள். ஆனால் புரதம் நிறைந்த இறைச்சியை எடுத்துகொள்ளும் போது அது செரிமான வேலைகளை அதிகம் செலவிட வேண்டும். இதனால் உடல் எடை குறையும் என்கிறார்கள்.
இது குறுக்கு பாதை. இயற்கை வழி கிடையாது. அதனால் இதை தவிர்ப்பதே நல்லது. இது எதிர்பார்த்த பலனையும் கொடுக்கும் எதிர்பாராத பலனையும் கொடுக்கும்.
இறைச்சி என்பதை மருந்தாக எடுக்கும் போது கவனியுங்கள். இது மிருகத்தின் இறந்த உடல். இதன் தன்மை கெட்டுப்போனது என்றும் சொல்லலாம்.
என்ன செய்யலாம்?
- வேலை செய்யாமல் உடல் பருமனை கொண்டுவிட்டு பிறகு கடுமையான உடற்பயிற்சியின் மூலம் எடை குறைக்க கூடாது.
- மாறாக வார்ம் அப், ஸ்ட்ரெச்சிங், உடல் இயக்கங்கள் பயிற்சி, வாக்கிங் என படிப்படியாக உடற்பயிற்சியை செய்வது தான் பலனளிக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.
- நீங்கள் சாப்பிடும் உணவு இயற்கையாகவோ பழங்களாகவோ எடுத்துகொண்டால் படிப்படியாக உடல் எடை குறையும்.
- பழங்கள், காய்கறிகள், ஊட்டச்சத்து உணவுகள் என இவற்றை திட்டமிட்டு எடுத்துகொள்வதன் மூலம் முதலில் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறும்.
- கொழுப்புகள் கரையும். பிறகு உடல் எடை கட்டுக்குள் வரும். இதுதான் ஆரோக்கியமானது. இயற்கைக்கு தாறுமாறான முயற்சியை பின் தொடரும் போது அது ஆபத்தை மட்டுமே உண்டாக்கும்.அவசரத்தில் கல்யாணம் செய்வது போல் வேகவேகமாய் உடல் எடையை குறைத்து, ஆசுவாசமாய் அழுவது போல் பக்கவிளைவுகள் நினைத்து கவலைப்படுவது நன்றாகவா இருக்கும்.