`வீரம்’, `வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் `தல 57′ படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். வில்லனாக பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.
அஜித் படங்களிலேயே ரூ.100 கோடியை தாண்டி அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் `தல 57′ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் `தல 57′ படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தற்போது, பல்கேரியாவில் எடுக்கப்பட்டு வரும் சில காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் கசிந்து வைரலாக பரவி வருகிறது.
ரம்ஜானை முன்னிட்டு ஜுன் 23 அல்லது 24ம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.