அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கிறிஸ்துவ தனியார் பள்ளி மைதானத்தில் 11 மாத குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பெர்த் நகரத்திலிருந்து 17 கி.மீ வடக்கே உள்ள மிகப் பிரபலமான Kingsway Christian College பள்ளி உள்ளது.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 5.45 மணியளவில் இந்த பள்ளியின் மைதானத்தில் ஒரு குழந்தை மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்ததுக்கு வந்த Western Australian பொலிஸ், குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
மேஜர் குற்றப் படையின் துப்பறியும் நபர்கள் சம்பவ இடத்தில் இரவு 11 மணிவரை விசாரணையில் ஈடுபட்டனர்.
ஈஸ்டர் விடுமுறை காரணமாக எந்த மாணவர்களும் பள்ளி வளாகத்தில் இல்லை, ஆனால் குழந்தை பராமரிப்பு பள்ளி எப்போதும்போல இயங்கிவந்ததாகக் கூறப்பட்டது.
பள்ளி முழுவதும் சோதனை செய்த துப்பறியும் நபர்கள் புகைப்படங்களை எடுத்துச் சென்றுள்ளனர் மற்றும் ஒரு குறிப்பிட்ட நபர் அவர்களுக்கு உதவிவருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குழந்தை யாருடையது, எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை மோற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.