அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் 28 வயதான ஆண்ட்ரியா ஜவோன் மன்றாய் என்ற பெண் செரோடர்மா பிக்மண்டோசம் என்னும் ஒரு வினோத நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நோய் மில்லியன் கணக்கான நபர்களில் ஒருவருக்கு தான் ஏற்படுமாம். இதனால், இந்த நோய் தோல் பகுதியின் உணர்வு திறனை அது அதிகரிக்கிறது.
எனவே, சரும புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் இவருக்கு 28 முறை இந்த பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “எனக்கு இருக்கும் பொழுது இந்த நோயைப் பற்றி கண்டுபிடிக்கவே பல நாட்கள் ஆனது. இதனால் என் உடல் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது.
எனவே நான் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. இரவு நேரங்களில் மட்டுமே வெளியில் தலை காட்டுவேன்.
மேலும், மருத்துவரை அணுக பல நேரங்களில் பகலில் செல்ல வேண்டிய நிலை இருக்கும். அப்போது உடலை மூடி பாதுகாப்பான உடைகளை அணிந்து கொண்டு செல்வேன்.” என கவலையுடன் அவர் தெரிவித்துள்ளார்.