எனக்கு நீ மட்டும் தான் இருக்கிறாய் என்றால் உனக்கு நாம் மட்டும் தானா இருக்கின்றேன் என்றே இப்போது ஜனாதிபதிக்கு சொல்ல நேரிட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
இப்போது நாட்டில் தனக்கு ஏற்ற வகையிலேயே பிரதமர் அதிகாரத்தினை வைத்துக் கொண்டு சர்வாதிகாரப்போக்குடன் செயற்பட்டு வருகின்றார்.
கைதுகளும் கூட பிரதமரின் விருப்பப்படியே நிறைவேற்றப்பட்டு வருகின்றது அனைத்துமே ரணிலின் திட்டம்.
மேலும் அம்பாந்தோட்டைக்கு தேவையில்லை என்றால் பொலன்னறுவைக்கு வர்த்தக வலயத்தினை தாருங்கள் என ஜனாதிபதியே பிரதமரிடம் கேட்கின்றார்.
இவற்றினை பார்க்கும் போது ஜனாதிபதி பிரதமருக்கு கொடுத்துள்ள இடத்தினை அவதானிக்க முடியுமானதாக இருக்கின்றது.
இதனால் பிரதமரிடம் “எனக்கு நீ மட்டும் தான் இருக்கின்றாய் என்றாலும் உனக்கு நான் மட்டும் தானா இருக்கின்றேன் என கேட்கவேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டு விடும்.
ஆனாலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த எப்போதுமே அப்போதைய பிரதமரிடம் எதுவுமே கேட்டதில்லை என்பதையும் இங்கு நினைவு படுத்துகின்றேன்.
மேலும் அம்பாந்தோட்டையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் அனைவரும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் பந்துல தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.