Loading...
மாரடைப்பால் காலமான விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த விவேக்குக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி காலமானார்.
Loading...
இந்த நிலையில் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Loading...