தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அதில், தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல் என்றும், திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு என்றும் இந்த ஊரடங்கு வரும் 20ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் / பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்வதற்கு தடை என்றும் உணவகங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், பெட்ரோல் பங்குகள் மட்டும் தொடர்ந்து இயங்க அனுமதி.
அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி, மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
இதையடுத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தள்லி வைக்கப்பட்டாலும் செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் செல்ல அனுமதி இல்லை என்றும் பூங்காக்கள், உயிரியல் பூங்காவுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், தங்கும் விடுதிகள் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் என்றும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டாலும் பால் வினியோகம் மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசியமான பணிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.
மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட் அனுமதிக்கப்படமாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.