Loading...
இலங்கை கிரிக்கெட் வீரர்ரான முத்தையா முரளிதரன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பல சாதனைகளை படைத்தவர். நேற்று அவர், தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்த நிலையில் அவர் திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...
மேலும், அவர் நெஞ்சுவலி காரணமாகவே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு அங்கு ஆஞ்சியோ சிகிச்சையும் அளிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தகவலானது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Loading...