பிரித்தானியாவில் பார் மற்றும் பப்கள் திறக்கப்பட்டதை அடுத்து ஒரு நாளைக்கு 2.8 மில்லியன் லிட்டர் பீர் குடிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகால உரடங்கிற்கு பிறகு பிரித்தானிய அரசாங்கம் கடந்த வாரம் COVID-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியது.
இதனால் பீர் தோட்டங்கள் மற்றும் உணவக முற்றங்கள் முழுவதும் மக்களால் நிரம்பி வழிந்தன. குறிப்பாக கடந்த சனிக்கிழமையன்று பிரித்தனையாவின் ‘Super Saturday Night’ என்று சொல்லும் அளவிற்கு கிட்டத்தட்ட 50,000 பார்கள், பப்கள் மற்றும் உணவகங்கள் மக்களால் நிரம்பியிருந்தன.
உண்மையில் ஒவ்வொரு நாளும் 3 மில்லயன் மக்கள் 6 மில்லியன் பைண்ட்ஸ், அதாவது 2.8 மில்லியன் லிட்டர் பீர் குடித்துவருகின்றனர். அதாவது ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது 2 பைண்ட் பீரை கல்பாக குடிக்கின்றனர்.
இதனால் உணவகம் மற்றும் பப் ஆபரேட்டர்கள், உரடங்கின்போது அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மிக எளிதில் போதுமான அளவு ஈடுசெய்யப்படும் என்று நம்புகிறார்கள்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் மிகவும் குறைந்த நிலையில், கடத்த 24 மணிநேரத்தில் 4 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 2,963 பேர் COVID-19க்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர், இது நாட்டின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கையை 4,390,783-ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில், பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 33 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் குறைந்தது முதல் ஷாட் வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.