காலபுருஷ சக்கரத்தில் 12 ராசிகளில் சில ராசிகள் சில மோசமான குணங்களைக் கொண்டதாக இருக்கின்றன.
அவற்றில் மிக மோசமானதாக பார்க்கப்படுவது பழிவாங்கும் குணம் மற்றும் பகையை மனதில் வைத்துக் கொண்டிருக்கும் குணம்.
பொதுவாகவே இந்த குணத்தை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் ராசிகளிடம் சற்று கவனமாக பழகுவது அவசியம்.
அவர்கள் எந்த சூழலில் நம்மை பிரச்சினைக்குரிய நிலையைத் தருவார்கள் என்பது தெரியாது.கவனமாக இருக்க வேண்டிய அந்த 5 ராசிகள் யார் என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.
மேஷம்
செவ்வாய் பகவானை ராசிநாதனாக கொண்ட மேஷ ராசியினர் எதிலும் சற்று வேகமாக செயல்படுபவர்கள் அதோடு சற்று முரட்டுத்தனமானவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் நெருப்பு ராசியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அதிக அகங்காரம் கொண்டவர்களாக இருப்பதோடு, யாரேனும் இவர்களின் மனதில் குழப்பம் விளைவித்தால் அதிக கோபப்படுவார்கள்.
இதுவே இவர்கள் முரட்டுத்தனமாகச் செயல்படக்கூடியவர்களாக மாற வாய்ப்புள்ளது. அதோடு தோல்வியை இவர்கள் விரும்புவதில்லை. தன் தோல்விக்கு காரணமான எதிரிகளை வீழ்த்துவதற்கு அதிகம் துடிப்பார்கள்.
இவர்களிடம் பகைமை அதிகம் இருக்கும். மன்னிக்கும் தன்மை மிகவும் குறைவாக தான் இருக்கும். இவர்களின் அடையாளம் செம்மறி ஆடு.
பின் செல்வது பயந்து அல்ல, பாந்து வந்து முட்டித் தூக்குவதற்கு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவர்களைப் பற்றி யாரேனும் தவறாக, மோசமாக பேசுவதை உணர்ந்தால் அவர்களை விடமாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியினர் எப்போதும் தலைமை தாங்க வேண்டும், ஆளுமை அதிகம் செலுத்த வேண்டும் என நினைக்கக்கூடியவர்கள்.
இவர்கள் மிகவும் கலகலப்பானவர்கள். அதே சமயம் இவர்கள் யாருடைய அழுத்தத்தின் கீழ் இருக்க விரும்புவதில்லை.
இவர்களை யாரேனும் பகைமை கொண்டு தாக்க நினைக்கும் போது, கடுமையான கோபத்தினை வெளிப்படுத்தி எதிரியை தலைகுனிவைத் தரும் வரை தாக்குவர்.
இவர்கள் தூங்கும் சிங்கம் போல அமைதியாக இருப்பார்கள். ஆனால் விரோதம், தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுவிட்டால், யாரென்று பார்க்காமல் எதிரிகளை தோற்கடிக்க வேண்டும் என தீவிரமாக இறங்குவார்கள்.
விருச்சிகம்
செவ்வாய் கிரகத்தை அதிபதியாக கொண்ட மற்றொரு ராசி விருச்சிகம். இவர்கள் நீர் ராசிகள்.
இவர்கள் ஒருவரைப் பிடிக்கவில்லை அல்லது விரோதம் கொண்டுவிட்டால் அவர்களிடம் எந்த சூழலாக இருந்தாலும் பேச மாட்டார்கள்.
எப்போதும் தன் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்ற எண்ணம் தான் இவர்களின் தலையில் ஓடிக் கொண்டிருக்கும். இவர்கள் தேள் குணம் கொண்டவர்கள்.
எதிரிகளை பழிவாங்க எந்த சந்தர்ப்பத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள்.
மகரம்
இவர்கள் இயற்கையில் மிகவும் அமைதியாக கருதப்படுகிறார்கள். இவர்கள் தனது வேலையை விட வேறு எதையும் விரும்புவதில்லை.
தங்கள் வாழ்க்கையை சீரானதாக வைத்துக் கொள்ள கடுமையாக போராடக்கூடியவர்கள். வாழ்க்கையின் இனிமை குறித்த சிந்தனையுடன் வாழ விரும்புகிறார்கள்.
இருப்பினும், யாராவது அவர்களுக்கு அல்லது அவர்களின் அன்புக்குரியவர்களுக்குத் தீங்கு செய்ய முயலும்போது, மிகவும் கோபமும், பழிவாங்கும் குணத்துடன் சீரத்துவங்குவார்கள்.
சனியின் தாக்கம் காரணமாக ஒருவரைப் பற்றி அவர்கள் மோசமாக உணரும்போது, அவர்களைப் பழிவாங்கிய பின்னரே அவர்களுக்கு அமைதி கிடைக்கும்.
கும்பம்
சனி பகவான் ஆட்சி செய்யும் மற்றொரு ராசி கும்பம். இவர்கள் இயற்கையாக நல்லவர்களாகவும், அநீதியை செய்ய விரும்பாதவர்களாக இருப்பார்கள்.
சரியான பாதையில், ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என நினைப்பார்கள்.
இருப்பினும் இவர்கள் சில நேரங்களில் மற்றவர்களைப் புண்படுத்தக்கூடிய மோசமான குணத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
தங்களின் புத்திசாலித்தனத்தால் மற்றவர்களை எப்படி வீழ்த்துவது, அவர்களை விட எப்படி முன்னேறுவது என சிந்திப்பார்கள்.