போலி செய்திகள் மற்றும் தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இணையத்தளங்கள் வாயிலாக பொய்யான தகவல்களை பரப்புதல் மோசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதுடன் குறித்த நிலைமைகள் சமூகத்தை பிளவுபடுத்துவதற்கும், வெறுப்புணர்வை பரப்புவதற்கும் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல நாடுகள் சட்டங்களை வகுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இணையத்தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பொய் பிரச்சாரங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் சமூக பாதுகாப்புக்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரஜைகளுக்கும் சிவில் சமூகத்தவர்களுக்கும் சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் நடடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கமைய குறித்த பணிக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சரும் வெகுசன ஊடக அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை ரிமை கோராத இணையத்தளங்கள் மற்றும் வெளியிடும் தகவல்களுக்கு பொறுப்பு கூற முடியாத சமூக வலைத்தளங்கள் தொடர்பில் மாத்திரமே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ரம்புக்வெல தெரிவித்தார்.