யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 30 வருட காலத்துக்கு பின்னர் நரம்பியல் சத்திர சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலத்துக்கு பின்னர் முதலாவது நரம்பியல் சத்திர சிகிச்சை 18-03-2015 யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு பெண் நோயாளிக்கு நடாத்தப்பட்டுள்ளது.
6மணிநேரம் நடைபெற்ற இந்த சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக வடமாகாணத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள சத்திர சிகிச்வை நிபுணர் வைத்திய கலாநிதி சஞ்ஜீவ கருசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு ஒரு அதிஸ்டமான நாள் . பெண் நோயாளி ஒருவரின் மூளையில் காணப்பட்ட கட்டி அகற்றப்பட்டுள்ளது.
மேற்குலக நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட 250 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன இயந்திர சாதனங்கள் மூலம் ஒரு சத்திர சிகிச்சையை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளோம்.
எனவே சத்திர சிகிச்சைக்கான உபகரணங்களை கொள்வனவு செய்து உதவிய அனைத்து சகாதார அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
எதிர்வரும் நாட்களில் ஒரு கிழமைக்கு ஒரு நோயாளிக்காவது சத்திர சிகிச்சை செய்யமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நரம்பியல் பிரிவில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றையும் சீர் செய்து மக்களுக்கு சேவை புரிவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.