அமெரிக்காவில் கருப்பின சிறுமியை பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓஹியோ மாநிலத்தில் உள்ள கொலம்பஸ் நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட சிறுமிக்கு 15 வயது எனவும், அவரின் பெயர் Makiyah Bryan என அமெரிக்க ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
சிறுமி கொல்லப்பட்டதால் மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை தணிக்கவும் நடந்ததை வெளிப்படுத்தவும் துப்பாக்கியால் சுட்டு காவலரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவான காட்சிகளை கொலம்பஸ் காவல்துறை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், காவல்துறை அதிகாரி சம்பவயிடத்திற்கு விரைந்த போது கும்பலாக சிலர் மோதலில் ஈடுபடுகின்றனர்.
சண்டையை நிறுத்துமாறு அதிகாரி பலமுறை கூச்சலிட்டும், Makiyah Bryan கத்தியால் மற்றொரு பெண்ணை தாக்க முயல, அதை தடுக்கும் நோக்கில் பொலிஸ் அதிகாரி சரமாரியாக அவரை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார்.
இதில் Makiyah Bryan சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Makiyah Bryan வீட்டிற்கு கும்பலாக வந்த பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், சிறுமி தான் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அவர் தன்னை தற்காத்துக் கொள்ளவே கையில் கத்தி வைத்திருந்ததாக Makiyah Bryan-யின் அத்தை Hazel Bryant தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணைத் துறை விசாரணையை நடத்தி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
https://youtu.be/Fpnibt9RQ2U?t=2