கொரோனா தடுப்பூசியன கோவிஷீல்டின் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600, மாநில அரசுக்கு ரூ.400 என மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்த வேண்டும் என சமீபத்தில் இந்திய அரசாங்கம் அறிவித்ததை சீரம் நிறுவனம் வரவேற்கிறது.
அந்த உறுதியளிக்கும் அறிவுறுத்தல்கள் தடுப்பூசி உற்பத்தியை அதிகாரிக்கவும், மாநில அரசாங்கங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி மையங்கள் தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்யவும் உதவும்.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு, உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்வோம்.
மொத்த உற்பத்தியில் 50% இந்திய அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்திற்கும், மீதமுள்ள 50% மாநில அரசாங்கங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும்.
இந்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, மாநில அரசாங்கங்களுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.400-க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600-க்கு விற்பனை செய்யப்படும்.
உலகளாவிய தடுப்பூசி விலைகளை கருத்தில் கொண்டு, உலகில் உள்ள மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடும் போது எங்கள் தடுப்பூசிகளின் விலை மலிவானது என்பதை உறுதிப்படுத்துகிறோம் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
IMPORTANT ANNOUNCEMENT pic.twitter.com/bTsMs8AKth
— SerumInstituteIndia (@SerumInstIndia) April 21, 2021