நாட்டில் வேகமாக பரவும் கோவிட் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதென கொழும்பு IDH வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய வைத்தியசாலைகளில் ஆபத்தான நிலைமக்குள்ளாகும் நோயாளிகளே IDH வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாட்களாக வைத்தியசாலைக்கு கொண்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஒன்றை காண முடிவதாக அவர் கூறியுள்ளார்.
இதுவரையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவு அதிகபட்ச திறனில் இயங்குகிறது. எனினும் கோவிட்டின் இரண்டாவது அலை ஏற்படுவது தொடர்பில் எச்சரிக்கை விடுப்பதற்கு இன்னும் நேரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கோவிட் சட்டத்திட்டங்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.