மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் பலியாகியுள்ள அதேவேளை மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
64 வயதுடைய கந்தையா நடராசா என்பவர் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியினை குறுக்கிட்ட மாட்டுடன் மோதி படுகாயம் அடைந்த நிலையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் நேற்று தனது அலுவலக கடமையினை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவர் வீதியினை குறுகிட்ட பாம்பினை கண்டு தனது மோட்டார் சைக்கிளை மறுதிசையில் திருப்பியபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்து மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்