பெரும்பாலும் தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைப்பதற்காக பலரும் அன்றாடம் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதுண்டு.
எலுமிச்சை ஜூஸில் உடலுக்கு தேவையான சத்துக்களான வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.
இருப்பினும் நீரில் எலுமிச்சை சாற்றினை ஒருவர் அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் தற்போது என்னென்ன பக்கவிளைவுகள் என்பதை பார்ப்போம்.
நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், அதில் உள்ள அதிகப்படியான அமிலம் பற்களில் உள்ள எனாமலை அரித்து, மிகவும் சென்சிடிவ்வாக மாற்றிவிடும்.
இதனால் மிகவும் சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவே எதையும் உட்கொள்ள முடியாமல் போகும்.
நீரில் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். நெஞ்செரிச்சல் அதிகமானால், நெஞ்சில் வலி ஏற்படும்.
எனவே நெஞ்செரிச்சல் உள்ளவர்கள், அமிலம் நிறைந்த உணவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
எலுமிச்சையில் வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் ஆசிட் ஏராளமாக நிறைந்துள்ளதால் இந்த சத்துக்கள், சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து இதனால் உடலில உள்ள டாக்ஸின்கள் மற்றும் சோடியம் விரைவில் வெளியேறும்.
சில நேரங்களில் எலுமிச்சை ஜூஸ் குடித்த பின்னர் உங்களுக்கு தாகம் எடுத்தாலோ அல்லது வறட்சி ஏற்பட்டாலோ, ஜூஸில் எலுமிச்சை சாற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஜூஸில் அதிக அளவில் எலுமிச்சை சாறு இருப்பதால், அது வறட்சியை ஏற்படுத்துகிறது.
குறிப்பு
ஒருவேளை நீங்கள் நீரில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடித்ததால் ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால், அதைக் குடிப்பதை உடனே நிறுத்திவிட்டு, மருத்துவரை அணுகுங்கள்.
முக்கியமாக ஒரு டம்ளர் தண்ணீரில் பாதி பழத்தின் எலுமிச்சை சாற்றினை மட்டும் கலந்து குடியுங்கள்.