பிரித்தானியாவில் WALK FOR LIFT THE BAN எனும் நடைப்பயணம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்நத தமிழீழ அரசாங்கம் இந்த நடை பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நடை பயணம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஏற்பாட்டாளர்கள், ‘பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக தொகுக்கப்பட்ட சட்டப்போராட்டத்தின் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சுக்கு விசேட தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்ய வழங்கியிருந்த 90 நாட்கள் நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் தமிழர்கள் தங்களின் அபிலாசைக்கான தீர்வை நோக்கி இணையவழி கையெழுத்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறாக பிரித்தானிய மக்களால் அவரவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பும் மின்மடல்கள் அவர்களை மேலும் பெரும் நெருக்கடிக்குள் உட்படுத்தியிருக்கின்றது. இதனை கருத்திற்கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதற்கான பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தொகுதிவாரியாக பரப்புரைகளை மேற்கொண்டு வரும் அதே நேரம் தமிழ்மக்கள் ஆதரவு வேண்டியும் விழிப்புணர்விற்க்காகவும், மேலும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்வை நோக்கி பயணிக்க முடியம் என்பதை கருத்திற்கொண்டு WALK FOR LIFT THE BAN எனும் நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இந்த நடைப்பயணம் 23.04.2021 வெள்ளிக் கிழமை காலை 10மணியளவில் வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியல் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலக நுழைவாயில் முன்பாக (no 10 Downing Street) நிறைவடைவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.