இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஒருநாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.
அந்த தகவலின் படி, இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 24 இலட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 36 இலட்சத்து 48 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை 13 கோடியே 54 இலட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,740 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 884 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பாரபட்சம் இல்லாமல் கொரோனா தாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் 145,304,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 3,084,014 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 123,571,467 பேர் குணமடைந்துள்ளனர்.