இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகளுக்கு பிறகு, அமெரிக்கா திரும்பியுள்ள இளவரசர் ஹரி, தமது பாட்டியின் 95வது பிறந்தநாளை அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவருடன் கொண்டாடியுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள ஹாலிவுட் விடுதியில் வைத்து கோடீஸ்வரரான Wallis Annenberg என்பவருடன் இளவரசர் ஹரி உணவருந்தியுள்ளார்.
கர்ப்பிணியான மனைவி மேகனும் மகன் ஆர்ச்சியும் தனித்திருப்பார்கள் எனக் கூறி லண்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பிய 24 மணி நேரத்திற்கு பிறகு 81 வயதான லாஸ் ஏஞ்சல்ஸ் கோடீஸ்வரர் Wallis Annenberg என்பவரை ஹரி சந்தித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், கணவர் இளவரசர் பிலிப்பின் மறைவுக்கு பிறகு துக்கம் அனுசரித்துவரும் ராணியார் தமது 95 வது பிறந்தநாளை தனியாகக் கழித்துள்ளார்.
கலிபோர்னியா திரும்பிய பிறகு, இளவரசர் ஹரி 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார் என்றே கருதப்பட்டு வந்த நிலையில், கோடீஸ்வரர்கள் மட்டுமே செல்லும் விடுதி ஒன்றில் காணப்பட்டுள்ளார்.
இளவரசர் ஹரி உணவருந்திய ஹாலிவுட் விடுதியானது, செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தும், புகைப்படங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் ஒரு விடுதியாகும்.
மட்டுமின்றி ஹரி சந்தித்துக் கொண்ட Wallis Annenberg என்பவர் அமெரிக்க பத்திரிகைத்துறை ஜாம்பவான் மறைந்த Walter Annenberg என்பவரின் மகளாவார்.
இருவரும் என்னப் பேசிக் கொண்டார்கள் என்பது தொடர்பில் ரகசியம் காக்கப்படும் நிலையில், அவசர அவசரமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததன் பின்னணி குறித்தும் பரபரப்பாக பேசப்படுகிறது.