ஜேர்மனியின் Bühl பகுதியில் சிறார் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவந்த 64 வயது நபருக்கு பிராந்திய நீதிமன்றம் ஒன்று சிறைத் தண்டனை விதித்துள்ளது.
Bühl பகுதியில் அமைந்துள்ள தமது குடியிருப்புக்கும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை இந்த நபர் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய்யுள்ளார்.
2005 முதல் 2019 வரை நடந்த இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் துணிச்சலாக பொலிசாரின் உதவியை நாடிய நிலையிலேயே, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மொத்தம் 134 வழக்குகள் குறித்த நபர் மீது பதியப்பட்டுள்ளது. 14 முறை மிகக் கொடூரமாகவும் இந்த நபர் சிறார்களிடம் நடந்து கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஜனவரி மாதம் சிறுமி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவர் 180 சிறார் துஸ்பிரயோக வழக்குகளில் தொடர்பு கொண்டிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, குறித்த நபர் இதுபோன்ற வேறு குற்றங்களிலும் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பேடன்-பேடன் பிராந்திய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.