`வீரம்’, `வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அஜீத் `சிறுத்தை` சிவா இயக்கத்தில் `தல 57′ படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். வில்லனாக பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.
நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் `தல 57′ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக அஜித்தின் `வேதளாம்` படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், `தல 57` படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் இசை ஜேம்ஸ் பாண்ட் பட தரத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக `தல 57` படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பாடல்களும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
இப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், ரம்ஜானை முன்னிட்டு ஜுன் 23 அல்லது 24ம் தேதியில் படம் ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.