இந்தியா – பெங்ளூரில் படப்பிடிப்பு நடந்து வந்த இடத்திற்கு அருகே கட்டுமானப்பணி நடக்கும் இடத்தில் கன்னட துணை நடிகை பத்மா மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரபல கன்னட நடிகர் வி. ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன் நடித்து வரும் படம் விஐபி. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்த படத்தை நந்தகிஷோர் இயக்கி வருகிறார்.
படத்தின் பாடல் காட்சி பெங்ளூர் ஏலஹன்கா அருகே உள்ள அவலஹள்ளியில் திங்கட்கிழமை படமாக்கப்பட்டது.
அன்றைய படப்பிடிப்பில் 160 பேர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு முடிந்து மாலை அனைவரும் வீட்டிற்கு கிளம்பும்போது துணை நடிகை பத்மாவதி மாயமானது தெரியவந்தது.
உடனே படக்குழுவினர் அவரை தேடினர். படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் லிப்ட் உள்ள பகுதியில் நடிகை பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காவற்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள், எவ்வாறாயினும் இது ஓர் கொலையாக இருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
ஜக்கூரை சேர்ந்த பத்மாவதி கடந்த 20 ஆண்டுகளாக படங்களில் நடித்து வந்தார்.