பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வரரும் முன்னாள் கால்பந்து வீரருமான ரயன் கிக்ஸ் தனது காதலியை அடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதி கிரேட்டர் மேன்செஸ்டரில் உள்ள தனது £1.7 மில்லியன் மதிப்பிலான பிரம்மாண்ட சொகுசு வீட்டில் ரயன், முன்னாள் காதலி கேட் கிரிவில்லி (36) உடன் இருந்தார்.
அபோது கேட்டை ரயன் கடுமையாக தாக்கியிருக்கிறார். இதோடு அங்கிருந்த கேட்டின் 20களில் உள்ள இளைய சகோதரியையும் தாக்கி காயம் ஏற்படுத்தினார் என அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த மருத்துவ குழுவினர் காயமடைந்த கேட்டுக்கு சிகிச்சையளித்தனர்.
இதை தொடர்ந்து ரயன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகளை சேர்க்காமல் 2017ல் இருந்து 2020 வரை மூர்க்கத்தனமான மற்றும் கட்டுப்படுத்தும் நடத்தையுடன் நடந்து கொண்டதாக இன்னொரு வழக்கும் ரயன் மீது பாய்ந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக வரும் 28ஆம் திகதி ரயன் நீதிமன்றத்தில் ஆஜராவார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வேல்ஸ் கால்பந்து மேலாளராக இருந்த ரயன் ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.